EBM News Tamil
Leading News Portal in Tamil

‘புது கெட்டப்’ தோனியுடன் ராம்சரண் சந்திப்பு – வைரலாகும் புகைப்படங்கள் | Ram Charan meets MS Dhoni in Mumbai photos gone viral


மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன், தெலுங்கு நடிகர் ராம்சரண் நேரில் சந்திப்பு பேசியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இருவரும் விளம்பர படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ராம் சரண் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் முடித்து விட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை நடிகர் ராம்சரண் நேரில் சந்தித்துப் பேசினார். அண்மையில் தோனியின் புது ஹெர்ஸ்டைல் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இதனையடுத்து அதே ஹெர்ஸ்டைலுடன் நடிகர் ராம்சரணுடன் தோனியின் புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

நடிகர் ராம்சரணும், தோனியும் புதிய விளம்பர படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விளம்பரப் படத்துக்காகத்தான் தோனி தனது ஹெர்ஸ்டைலை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு தோனியும், ராம்சரணும் பெப்ஸி விளம்பரத்துக்காக இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கும் ‘கேம்சேஞ்சர்’ படம் ராம்சரணின் அடுத்த படைப்பாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.