EBM News Tamil
Leading News Portal in Tamil

திருக்குறள் மயமான விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி!


விருதுநகர்: ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் | வாய்நாடி வாய்ப்பச் செயல்’ – இந்த குறட்பாவில் நோயாளிக்கு வந்துள்ள நோய் என்ன? அதற்கான மூல காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்தையும் கொடுத்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற அரிய கருத்துகளை இன்றைய மருத்துவ மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் குறட்பாக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

ரூ.390.22 கோடியில் கட்டப்பட்ட விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2022 ஜனவரி 12-ல் திறக்கப்பட்டது. வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைத் தாண்டி திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளதோடு, வளாகம் முழுவதும் 150 குறட்பாக்களை எழுதி வைத்துள்ளது மாணவர்களைக் கவர்ந்துள்ளது.