EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்காவில் திறக்கப்படும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – ‘Statue of Equality’ எனப் பெயர் சூடல் | 19-foot Ambedkar statue, named Statue of Equality, to be unveiled in US


வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார், இந்த அம்பேத்கர் சிலையையும் உருவாக்கியுள்ளார். இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ (Statue of Equality) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இதுவாகும்.

வரும் அக்டோபர் 14ஆம் தேதி இந்த 19 அடி உயர அம்பேத்கர் சிலையும் திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் போதனைகளை பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கவும் உதவும் என்று ஏஐசி தெரிவித்துள்ளது.