EBM News Tamil
Leading News Portal in Tamil

‘அகண்டா’ போயபதி சீனு இயக்கத்தில் சூர்யா? | Suriya to collaborate with Telugu director Boyapati Srinu


சென்னை: ‘அகண்டா’, ‘ஸ்கந்தா’ ஆகிய படங்களை இயக்கிய போயபதி சீனுவின் புதிய படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்பவர் போயபதி சீனு. கடந்த 2021ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவை வைத்து இவர் இயக்கிய ‘அகண்டா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கந்தா’ படத்தை போயபதி சீனு இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘ஸ்கந்தா’ படத்துக்குப் பிறகு போயபதி சீனு இயக்கும் புதிய படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை இறுதியானால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் ‘கங்குவா’, படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்துக்குப் பிறகு போயபதி சீனுவின் படத்துக்கான தேதிகளை அவர் ஒதுக்க இருப்பதாக தெரிகிறது.