EBM News Tamil
Leading News Portal in Tamil

சினிமாவில் 64-ம் ஆண்டு | “இணையற்ற பேரரசர்” – கமல்ஹாசனை புகழ்ந்த ஸ்ருதிஹாசன் | shruti haasan praise kamal haasan for his 64th cinema journey


சென்னை: “திரைத் துறையை 60 ஆண்டுகளாக ஆளும் இணையற்ற பேரரசர் இன்று சினிமாவில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்” என நடிகர் கமல்ஹாசனை அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏற்ற இறக்கங்கள், வெற்றிகள், சவால்கள் என அனைத்தையும் பார்த்திருக்கிறார். ஆனால் எதுவும் உலக நாயகனையும், தொழில் துறையை முன்னேற்றுவதற்கான அவரது முயற்சிகளையும் நிறுத்தவில்லை. திரைத்துறையை 60 ஆண்டுகளாக ஆளும் இணையற்ற பேரரசர் இன்று சினிமாவில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்” என பாராட்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றார். இந்தப் படம் வெளியாகி இன்றோடு 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது. இதன் மூலம் இந்திய திரையுலகில் கமல் 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.