EBM News Tamil
Leading News Portal in Tamil

முதல் நாளில் உலக அளவில் ரூ.33 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’  | Chiranjeevi starrer Bholaa Shankar movie box office collection day 1


‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வால்டர் வீரய்யா’ படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘போலா சங்கர்’ (Bholaa Shankar ). படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார். படத்துக்கு மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். சிரஞ்சீவி தவிர்த்து தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகுபாபு, முரளி சர்மா, ரவிசங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஸ்ருதி ஹாசன் கேரக்டரில் தமன்னாவும் நடித்துள்ளனர். படம் நேற்று (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியானது. ஆனால் பெரும்பாலும் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களே வெளியாகின. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.