“40” சீட்டுகள், “டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம்” ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்
சென்னை: மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த “40” சீட்டுகள்..!
சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்பிருந்தே, தமிழக அரசியலில் களை கட்டி வருகிறது.. ஜெயிலுக்கு போய்விட்டு வருவதால், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு ஏராளமாக இருக்கும் என்று கணக்கு போட்டார் சசிகலா.
சென்னைக்கு காரில் வந்த அன்றும், 23 மணி நேர தொண்டர்களின் வரவேற்பை பார்த்து மிரண்டும் போய்விட்டார்.. அதனால், எப்படியும் அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தாவி வருவார்கள் என்று நினைத்தார்..
“கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் வேனில் உட்கார்ந்தபடியே சொன்னார்.. அதிமுகவில் ஒருபுயலே வீச போகிறது என்ற ரீதியில் எதிர்பார்ப்பும் கிளம்பியது. ஆனால். ஒன்றுகூட நடக்கவில்லை.. எல்லாமே புஸ்ஸென்று போய்விட்டது. எதனால் சசிகலா அமைதியாக இருக்கிறார்? ஏதோ பெரிய அளவுக்கு மெகா பிளானை தீட்டி வருகிறார் என்ற யூகங்கள் இன்றும் வலம் வருகின்றன.