இந்தியாவின் அனைத்து முக்கிய இரயில் வழிதடங்களில் விரைவில் இரண்டு தளங்கள் கொண்ட புதிய இரயில் பெட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
வாழ்க்கையில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் அதே செய்தாலும் சளிக்காதது இரயில் பயணம் என்பார்கள். அதிவேகத்தில் குளிர்சாதனங்களுடன் இயங்கும் இரயிலாக இருந்தாலும் சரி, சாதாரண லோக்கல் மின்சார இரயிலாக இருந்தாலும் சரி இரயில் பயணம் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடியவை.