டெல்லி : 2020 ம் ஆண்டு கொரோனா ஆண்டு என அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. ஆனால் 2021 ம் ஆண்டை தேர்தல் ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன.
சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்காக அரசியல் கட்சிகள் ஒரு புறமும், இந்திய தேர்தல் கமிஷன் ஒரு புறமும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானால் மட்டுமே அது ஜனநாயக முறைப்படியான தேர்வாக இருக்க முடியும். இந்த 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது தேர்தல் கமிஷனுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.