EBM News Tamil

ஹத்ராஸ் கொடுமை.. பெண் நிருபரின் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதா உ.பி. அரசு? லீக் செய்யப்பட்ட ஆடியோ

0

டெல்லி: ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் செய்தி சேகரிக்கும் நிருபர்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா டுடே செய்திச் சேனலின் பெண் செய்தியாளர் போன் உரையாடல் லீக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பெண்ணின் உடலை அவரின் பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையே அதிகாலை 2.30 மணிக்கு ஊருக்கு வெளியே வைத்து தகனம் செய்தது.

அப்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற இந்தியாடுடே ஊடகத்தின் பெண் நிருபர் தனுஸ்ரீ பாண்டே, புகை வருவதை பார்த்து சந்தேகமடைந்து அங்கிருந்த காவல்துறையினரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அங்கே என்ன நடக்கிறது.. எரிக்கப்படுவது என்ன என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. எதுவாக இருந்தாலும் மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நான் பாதுகாப்பு கொடுக்க வந்துள்ளேன். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது என்று திரும்பத் திரும்ப இன்ஸ்பெக்டர் கூறியபடியே இருந்தார்.

இதன்பிறகுதான், தலித் பெண் உடல் எரிக்கப்பட்டது.. பெண்ணின் உறவினர்கள் உடலை எரிக்க கூடாது, தங்களிடம் தரவேண்டும் என்று கூறி காவல் துறையினரிடம் கெஞ்சியது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், குறிப்பிட்ட அந்தப் பெண் நிருபரின் தொடர் முயற்சிகளால், உலகுக்கு தெரிய வந்தன. இதன் பிறகுதான் உத்தரபிரதேச மாநில அரசு அவசர கதியில் அந்த உடலை எரித்து ஏன் என்ற கேள்வி துளைக்க ஆரம்பித்து, நாடு முழுக்க கொந்தளிப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் குறிப்பிட்ட அந்த பெண் பத்திரிக்கையாளரை தொலைபேசி உத்தரபிரதேச மாநில அரசின் உத்தரவின் பேரில் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.