EBM News Tamil

ஸ்கூட்டரில் ஹாயாக வந்தனர்.. பாருக்கு வெளியே வைத்து ஓனரை சுட்டுக் கொன்றனர்.. அதிர்ந்து போன பெங்களூர்

0

பெங்களூர்: பெங்களூரின் மிக முக்கியமான ஒரு இடத்தில் பலர் கண் பார்வையில், பார் ஓனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் முக்கியமான வணிக பகுதி பிரிகேட் ரோடு. அங்கு டூயட் பார் என்ற பெயரில் மதுபான கடை நடத்தி வந்தவர் மணிஷ் என்ற சரவதம் ஷெட்டி.

நேற்று இரவு 9 மணிக்கு தனது மதுபான பாருக்கு வெளியே நடந்து வந்தபோது, ஷெட்டி, சரியாக குறி வைத்து சுடப்பட்டார். அங்கேயே துடித்து விழுந்த அவர் அருகே உள்ள மல்லையா மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்.

உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வந்த 2 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ஸ்கூட்டரை அங்கேயே கொலையாளிகள் விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.