EBM News Tamil

வீடுகள் ‘குறிக்கப்படுகிறது..’ ஹிட்லரின் ‘நாசி’ கொள்கையை ஆர்எஸ்எஸ் கையிலெடுக்கிறது.. குமாரசாமி பகீர்

0

பெங்களூர்: அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் வீடுகளை தனியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து வைப்பதாகவும், ஜெர்மனியின் நாசிக் கட்சி பின்பற்றிய அதே பாணியை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்பற்றுவதாகவும், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான எச்டி குமாரசாமி பெறும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் அடிக்கல் நாட்டு விழா, சில மாதங்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து, நாடு முழுக்க ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டும் பணிகளில் இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டாயம் நிதியளிக்க வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்கள் வலியுறுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.