ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு எனலாம். ஏனெனில் பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது. ஆரம்பத்தில் பங்கு சந்தைக்குள் நுழையும்போது முதலீட்டாளர்களை கவர, நல்ல நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் வெளியிடுவார்கள்.
ஆக மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை ஆரம்ப காலத்திலேயே வாங்குவது நல்ல விஷயம். ஒன்று குறைந்த விலையில் கிடைக்கும், மற்றொன்று அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் நிச்சயம் போட்டிகள் குறைவு. இப்படி முதலீட்டாளர்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக உள்ள நிலையில், அதில் முதலீடு செய்வது சிறப்பானதொரு விஷயம் தானே.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் பங்கு வெளியீட்டினை பற்றித் தான்.