அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் எந்த மூலையிலும் டோல்கேட்கள் இருக்காது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்கள் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தி ஏற்படுகிறது. எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் டோல்கேட்களில் கட்டண வசூல் நடந்து வருவதாக வாகன ஓட்டிகள் மிக நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் விதிகளை பின்பற்றாமல், கட்டண கொள்ளை நடக்கிறது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால் டோல்கேட்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் பல முறை போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. எனினும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில், டோல்கேட்கள் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கப்போகிறது.