EBM News Tamil

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு.. மேலும் 26 பேர் கைது.. 40 பேருக்கு வலை

0

சென்னை: தமிழகத்தையே அதிர வைத்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 40 பேரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் 2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக ஒரு சில தேர்வு மையங்களை தேர்வு செய்து, பலர் முறைகேடாக பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. இப்படி முறைகேடு செய்து சிலர் வெற்றிபெற்றது உண்மை தான் என டிஎன்பிஎஸ்சி அவர்கள் மீது புகார் அளித்தது. இந்த புகாரை ஏற்று சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன். இடைத்தரகர்கள், பணம் கொடுத்து வென்றவர்கள் உட்பட 32 பேரை கடந்த பிப்ரவரி மாதம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.