EBM News Tamil

மழை வெயிலில் சேதமாகாது.. பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு.. வாங்குவது எப்படி ?

0

டெல்லி: மழை வெயிலில் சேதமாகாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் பிளாஸ்டிக் கார்டு வழங்குகிறது மத்திய அரசு. ரூ.50 செலுத்தினால் வீட்டுகே கார்டு வரும். இதை எப்படி வாங்குவது என்பதை அப்போது பார்ப்போம் மத்திய அரசு அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் தற்போது வழங்கப்படும் ஆதார் அட்ட நீளமானதாகவும் எளிதில் சேதமடையக் கூடிய வகையில் உள்ளது. மக்கள் அவசிய தேவை மற்ற நேரங்களில் வெளியில் எடுத்து செல்வது இல்லை. இந்நிலையில் உதய் (UIDAI) நிறுவனம் மழை வெயிலில் சேதமாகாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் அட்டையை பிளாஸ்டிக் (பிவிசி) கார்டு வடிவத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்கேன் செய்து, ஆதார் எண்ணை பரிசோதிக்கும் நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஏடிஎம் கார்டு போல் பிளாஸ்டிக் அட்டையாக பர்சுக்குள் வைக்கும் வகையில் இந்த ஆதார் அட்டை உள்ளது. மழையால் சேதம் ஆகாது. இது குறித்து உதய் நிறுவனம் வெளியிட்ட ட்விபதிவில், ‘பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஆதார் பிவிசி அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஆப்லைனிலும் இதை உடனடியாக பரிசோதித்து பார்க்க முடியும்,’ என கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.