டெல்லி: இந்தியா சுயசார்பு அடைய வேண்டுமென்றால் தனியார் துறைக்கு ஊக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆறாவது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில முதல்வர்களுடனும், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.