EBM News Tamil

மக்களைப் பற்றி கவலைப்படாத கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளரா? – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

0

சென்னை: கமல்ஹாசனுக்கு மக்களைப் பற்றி எல்லாம் கவலையில்லை, ஆறு மாதம் எங்கோ போய் ஒளிந்து இருந்து விட்டு இப்போது முதல்வர் வேட்பாளராக வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி ரசிகர்கள் விரும்பவில்லை. தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அவரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசனை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன் என்றார். கடந்த ஆறு மாதமாக எங்கோ சென்று ஒளிந்து இருந்து விட்டு இப்போது வந்தவுடன் முதல்வர் வேட்பாளராக வருகிறார். அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

Leave A Reply

Your email address will not be published.