சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கமலின் இளமை இதோ இதோ பாடலை வடிவேலுவின் காமெடி சீன்களுக்கு சிங்க் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் டிவி, ரேடியோக்கள், ஸ்பீக்கர்களில் இளமை இதோ இதோ என்ற சகலகலா வல்லவன் படத்தில் வரும் பாடல்தான் ஒலிக்கும். டிசம்பர் 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு பிறந்தவுடன் இப்பாடல் ஒலிக்கும்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போது இந்த வாட்டியும் இதே பாடல்தானா என சிலர் வேடிக்கையாக கேட்பதுண்டு. இந்த 2021 ஆம் ஆண்டும் நாம் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இளமை இதோ இதோ பாடலைதான் கேட்க போகிறோம்.