EBM News Tamil

புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை.. அடுத்து தமிழகம்தான்.. திருமாவளவன் சொல்வதை பாருங்க

0

புதுச்சேரி: புதுச்சேரி மாதிரிதான் தமிழகத்திலும் நடக்க கூடும், புதுச்சேரியில் நடப்பது தமிழகத்திற்கான ஒத்திகையே என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல முடியாமல் பதவியை இழந்தது. இந்த நிலையில்தான், முன்னதாக தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் திருமாவளவன் கூறியதாவது: ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடத்தை புதுச்சேரி வாக்காளர்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.