சேலம்: பெற்ற அப்பாவை பார்த்து மகள் சொன்ன அந்த வார்த்தை, இப்படி ஒரு பயங்கரத்தில வந்து முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ளது ஆதிக்காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி கோபால்- மணி. இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.
பிரியங்கா அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்… 6 மாசத்துக்கு முன்பு, கோபாலுக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் சென்னையில் சிகிச்சையும் எடுத்து கொண்டுள்ளார்.. இப்போது கொஞ்சம் சுமாராக இருப்பதால், கிராமத்திலேயே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
மனைவி, விவசாய வேலை செய்கிறார்.. அடிக்கடி வெளியூர்களில் இருந்தும் வயல் வேலைக்கு அழைப்பார்கள் என்பதால், வெளியூருக்கம் அடிக்கடி சென்றுவருவார்.. மகன் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இப்போது ஸ்கூல் திறக்கவில்லை என்பதால் பிரியங்கா வீட்டில்தான் இருக்கிறார்.. அதேபோல, கோபாலும் காய்கறி விற்கும் நேரம் போக வீட்டிலேயே இருப்பார்.