EBM News Tamil

நீட் மாணவர்கள் குவியும் கோட்டா சிட்டி.. 5000 கோடி பிசினஸ்.. எப்படி சாத்தியம்?

0

கோட்டா: ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் பயிற்சி தேர்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டும் நகரம் என்றால் அது ராஜஸ்தானின் கோட்டா நகரம் தான். நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவு தேர்வு, ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் நுழைவு தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் விரும்பும் இடமாக கோட்டா நகரம் உள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் மிகவும் கஷ்டப்பட்டு படித்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற நிலை உள்ளது. மொத்தம் உள்ள 720 மார்க்கில் யார் அதிக மார்க் எடுக்கிறார்களோ அவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்பதால் இந்த தேர்வு மிக கடுமையாக உள்ளது, இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படுவதால் பல லட்சம் பேர் மருத்துவ கனவுடன் உள்ளவர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தலைச்சிறந்த கோச்சிங் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். சாமானியர்களால் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. அந்த வகையில் நீட் தேர்வுக்கு என்றே பிரத்யேகமாக பல கோச்சிங் சென்டர்கள் உள்ள நகரமாக ராஜஸ்தானின் கோட்டா நகரம் உள்ளது. இங்கு தான் இந்தியாவில் இந்த முறை நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பயிற்சி பெற்றார். 2வது ரேங்க் உள்பட பலர் இங்கு பயிற்சி எடுத்தவர்கள் தான்.

Leave A Reply

Your email address will not be published.