EBM News Tamil

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. “அடுத்து போர்..” சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்!

0

பீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது.

ஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி நாடு இல்லை என்று சீனா கூறிவருகிறது.

இந்த நிலையில்தான், தைவானுடன் டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்கா நட்பை அதிகரித்தது. அமெரிக்கா நெருங்குவதை உணர்ந்த சீனா பதிலடிக்கு ரெடியாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக தைவானின் வான்வெளிப் பகுதிகளுக்கு சீனா போர் விமானங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.