EBM News Tamil

திமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி!

0

சென்னை: திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் துணை முதல்வர்கள் பற்றின செய்தி ஒன்று அடிபட்டது…

அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்றால், வன்னியர், கவுண்டர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, தலா ஒரு துணை முதல்வர் பதவி என்று 4 பேரை நியமிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதாம். அதற்கு ஓபிஎஸ்சும் பச்சைக்கொடி காட்டியதாகவும் சொல்லப்பட்டது. இது அப்படியே ஜெகன்மோகன் ரெட்டி பாணி என்பதால், நிச்சயம் ஆந்திராவை போலவே இங்கும் பலன் தரும் என்பதாலேயே இந்த டாக் ஓடியது. அதிமுகவில் அந்த பேச்சு எந்த அளவுக்கு சென்றது என்பது தெரியவில்லை.. ஆனால், திமுகவில் இன்னமும் இதை பற்றின பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.