சென்னை: ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.. ஆனால் ரஜினி அரசியல் அறிவிப்பை விட விஜய்யின் நெய்வேலி செல்பி போட்டாதான் மிகப் பெரிய வைரலாகியுள்ளது. இந்த சமயத்தில் விஜய் களமிறங்கினால் அரசியலில் அவர் அதிரடி காட்டுவார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மூடில் உள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் ஒரு வழியாக அரங்கேறப் போகிறது. டிசம்பர் 31ம் தேதி எல்லாவற்றையும் அறிவிப்பதாக கூறியுள்ளார் ரஜினிகாந்த். உடம்பு சரியில்லை என்ற காரணம் சொல்லி கொண்டிருந்த ரஜினி, திடீரென கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளதன் பின்னணியில் நிர்ப்பந்தம் உள்ளதாக உள்ளதாக விசிக தலைவர் திருமாவும் கேள்வி எழுப்பி இருந்திருந்தார். எது உண்மை என்று ரஜினியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் யாராலும் எந்த முடிவுக்கும், கருத்துக்கும் வர முடியவில்லை. ஆனால் நிச்சயம் ரஜினியின் பின்னணியில் பாஜக இருக்கலாம் என்றே பலரும் சந்தேகப்படுகின்றனர்.