EBM News Tamil

ஜெயிச்சது யாரு “டிரம்ப்பா” இல்லாட்டி “பிடனா”.. உடனே தெரியாது.. காத்திருக்கணும்!

0

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உடனடியாக தெரிய வாய்ப்பில்லையாம். அதாவது தேர்தல் நடந்த நாளன்று இரவே முடிவு தெரிய வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில்யாருக்கு வெற்றி என்பது பெரும் விவாதமாகியுள்ளது. ஜோ பிடன் கையே தற்போதைக்கு ஓங்கியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் உடனடியாக தெரிய வராது என்று கூறப்படுகிறது. காரணம் இந்த முறை வாக்குச் சீட்டுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. எனவே அவற்றை எண்ணி முடிப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் முடிவும் தாமதமாகும்.

இதற்கு முன்பு பராக் ஒபாமா, 2008ல் வெற்றி பெற்றது, பின்னர் மீண்டும் 2012ம் ஆண்டு வெற்றி பெற்றது. அடுத்து 2016ல் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஆகியவையெல்லாம் தேர்தல் முடிந்தவுடனேயே முடிவு தெளிவாக தெரிந்து விட்டது… அப்போது வாக்கு சீட்டுகள் இந்த அளவுக்கு பெரிய அளவில் பதிவாகவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகளே அதிகம் என்பதால் முடிவும் தெளிவாக தெரிந்து விட்டது.

Leave A Reply

Your email address will not be published.