EBM News Tamil

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரிப்பேன்… குற்றவாளிகள் முகத்திரையை விலக்குவேன் -ஸ்டாலின் உறுதி

0

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சதி விசாரிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அம்மா என்பதையும், விசாரணை என்பதையும் ஆட்சியாளர்கள் அர்த்தமற்றவையாக ஆக்கியிருக்கிறார்கள் என சாடியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“தர்மயுத்தம்” நடத்தி, துணை முதலமைச்சர் பதவி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் இப்போது, “தர்ம யுத்தம்-2” என்று மிரட்டினார். ஆனால் ஜெயலலிதா அம்மையார் மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் “சம்மனை” நினைவூட்டியதாலும், வேறு சில காரணங்களினாலும்,- ஒரே வாரத்தில் திரு பழனிசாமிக்கு “முதலமைச்சர் வேட்பாளர்” என்று ஆசி வழங்கி, கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, இரண்டாவது தர்ம யுத்தத்தையும் முடித்துக் கொண்டு, அமைதியாகி விட்டார் பன்னீர்செல்வம்.

Leave A Reply

Your email address will not be published.