EBM News Tamil

ஜியோவை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்! மெய்யாலுமே ஏர்டெல் பெரிய ஆள் தான்!

0

ரிலையன்ஸ் ஜியோ கடந்த 2016-ம் ஆண்டு வந்ததில் இருந்து, இதுவரை இந்திய டெலிகாம் துறையில் இருக்கும் கம்பெனிகள் கண்ணீர் விடாத குறையாகத் தான் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக கடுமையாக வியாபாரத்தில் போராடும் கம்பெனி, ஏர்டெல்.

இந்திய டெலிகாம் துறையை மொத்தமாக வளைக்கத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு, கடைசி வரை வழி விடாமல், மேலும் முதலீடு செய்து தன் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறாது ஏர்டெல்.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு வாடிக்கையாளர் மூலம் வரும் வருமானம் தான் இதன் பொருள். உதாரணமாக ஒரு கம்பெனிக்கு 100 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் கம்பெனிக்கு 800 ரூபாய் வருவாய் வருகிறது என்றால், 800 / 100 = 8 ரூபாய் தான் மேலே சொன்ன ARPU.

இந்த ARPU விஷயத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது ஏர்டெல். டெலிகாம் துறையைப் பொருத்த வரை, அதிக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதும், புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த ARPU கணக்கும் மிக முக்கியம்.

Leave A Reply

Your email address will not be published.