சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் ரஹானே அரைசதம் அடித்துள்ளார். இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதிரடியாக நடந்து கொண்டு இருக்கிறது. புஜாரா, சுப்மான் கில், கோலி ஆகியோர் மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தனர்.
அதிலும் கோலி, கில் டக் அவுட் ஆகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதில் தொடக்கத்தில் திணறிய அணி தற்போது அதிரடி காட்ட தொடங்கி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் ரஹானே அரைசதம் அடித்துள்ளார். முதல் டெஸ்டில் இவர் ஸ்பின் பவுலர்களையும், ரிவர்ஸ் ஸ்விங் பவுலர்களையும் எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆனார். இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.