சென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த இளைஞர்.. உயிருக்கு ஊசலாடும் ப்ரீத்தி.. நடந்த பயங்கரம்!
சென்னை: சென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி செயின் பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை மைலாப்பூர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்து வீட்டின் பீரோவில் நகையை திருட முயன்ற பெண் கையம் களவமாக பிடிப்பட்டார். அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசார் பொதுமக்கள் ஒப்படைத்திருந்தனர். இந்த சூழலில் நேற்று முன்தினம் சென்னை கேகே நகரில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து இளம் பெண்ணை கத்தியால் கத்தி நகையை பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. வாடகைக்கு வீடு பார்ப்பது போல நடித்து திருடும் சம்பவங்கள் மீண்டும் சென்னையில் நடைபெற தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கே.கே.நகர் பொன்னம்பலம் பதியில் வசிப்பவர் ப்ரீத்தி (31). இவரது வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விட்டு வருகிறார். வீட்டில் புதிய குடித்தனம் வர விரும்புபவர்களுக்காக வாடகைக்கு வீடு உள்ளது என போர்டு வைத்திருந்தார். இதை நோட்ட மிரட்டல் திருடர் ஒருவர் கைவரிசையை காட்ட திட்டமிட்டிருக்கிறார்.