EBM News Tamil

சீனாவின் செம பிளான்.. வீராப்பு வேண்டாம் என விவேகமாக செயல்படும் டிராகன் தேசம்.. விலகும் அமெரிக்கா!

0

உலகமே இன்று பரவி வரும் கொரோனா காரணமாக பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த கொரோனாவின் தொடக்க நாடான சீனாவோ தற்போது ஏற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது. அதிலும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இரண்டாம் கட்ட பரவலைக் எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட பரவல் தீவிரமாகி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் செப்டம்பர் மாத வளர்ச்சி குறித்தான அறிக்கை வெளியானது. அதன் படி இறக்குமதி 13.2% வளர்ச்சியுடனும், ஏற்றுமதி 9.95% வளர்ச்சியுடனும் காணப்படுகிறது. இது சீனாவின் வலுவான வளர்ச்சியையே சுட்டிக் காட்டுக்கின்றது. இது கொரோனா பெருந்தொற்றிலிருந்து விடுபட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்பி கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.