EBM News Tamil

சினிமாவை போல் நிகழ்ந்த சம்பவம்… 370 கிலோ மீட்டரை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்… ஹீரோவாக மாறிய பொதுமக்கள்…

0

ஆம்புலன்ஸ் ஒன்று 370 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் கடந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மனித உடல் உறுப்புகளையும், நோயாளிகளையும் அவரசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்காக, காவல் துறையினரும், பொதுமக்களும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் பலமுறை நடந்துள்ளது. இந்த வகையில், அவசர அறுவை சிகிச்சைக்காக பெண் ஒருவரை மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் 370 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. சுஹானா என்ற 22 வயது பெண்ணுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எனவே கர்நாடக மாநிலம் புத்தூரில் உள்ள மஹாவீர் மருத்துவ மையத்தில் இருந்து, பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேஹி மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.