EBM News Tamil

சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாஜகவில் சேர்ந்துவிட்டு பெரியாரிஸ்ட் என சொல்லாதீங்க-கொளத்தூர் மணி

0

சென்னை: சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டு தன்னை பெரியாரிஸ்ட் என நடிகை குஷ்பு சொல்ல வேண்டாம் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கொளத்தூர் மணி கூறியுள்ளதாவது: அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் குஷ்பு அவர்களுடைய நேர்காணலில் தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என்கிறார். நேர்காணல் கண்டவர் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.. நீங்கள் பெண்ணுரிமைவாதி என்று சொல்லிக் கொள்ளுங்கள்? ஏன் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறீர்கள் என கேட்கிறார்.

அப்போது, பெரியாரின் கடவுள் மறுப்பு போன்ற எல்லா கருத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பை எல்லாம் விட்டுவிடுங்கள்.. பெண்ணுரிமைவாதியாக சொல்லுங்கள்.. காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபா என்ற சிறுமியை இந்து மதத்தை காப்பாற்றுவதாக சொல்லுகிற இந்த பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள், இந்து கோவிலுக்குள் சில நாட்கள் வைத்து தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.