சென்னை: சசிகலாவுக்கு மிக முக்கிய பதவி ஒன்று தரப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.. இதனால் தமிழக அரசியல் களம் படுசூடாக தகித்து கொண்டிருக்கிறது..!
சசிகலா சென்னைக்கு வந்த அன்று “ரோடு ஷோ” நடத்தி மிகப்பெரிய மாஸ் கிளப்பினார்.. இந்த ஒருநாளே இப்படி இருக்கிறதே, இனி அடுத்தடுத்த அதிரடிகளில் அதிமுக என்னாகுமோ என்ற கலக்கம் வரும் அளவுக்கு பரபரப்புகள் நிகழ்ந்தன. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
அதேசமயம், சசிகலா 4 வருஷம் ஜெயிலில் இருந்து வந்திருப்பதால், ஆதரவாளர்கள் தரப்பில் இப்படி ஒரு பரபரப்பு இருக்கலாம்.. மற்றபடி மக்கள் மனங்களில் சசிகலாவுக்கு அந்த அளவுக்கு இடம் இல்லை என்று ஒருசில அரசியல் நோக்கர்களும் கருத்து சொன்னார்கள்.