EBM News Tamil

கொரோனா வைரஸ் தாக்கம்.. முடங்கிப் போன ஏற்றுமதி.. சரிவில் பயணிகள் வாகன விற்பனை..!

0

சமீப மாதமாக தான் கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், வாகன விற்பனையானது துளிர் விடத் தொடங்கியுள்ளதாக வாகன நிறுவனங்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளன.

எனினும் பயணிகள் வாகன விற்பனையானது சற்று சரிவிலேயே இருப்பதாக கூறுகின்றது சியாம் தரவுகள்.

இது குறித்து வெளியான பிசினஸ் டுடே செய்தியில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் – முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பயணிகள் வாகன விற்பனையானது முடங்கி போயுள்ளது. பயணிகள் வாகன ஏற்றுமதியானது இந்த காலகட்டத்தில் 57.52% வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறித்து சியாம் வெளியிட்டுள்ள தரவில், கடந்த ஆண்டில் பாதியில் 3,65,247 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனினும் நடப்பு ஆண்டின் பாதியில் 1,55,156 வாகனங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பயணிகள் கார் ஏற்றுமதி 64.93% சரிவினைக் கண்டுள்ளது. இதே பயன்பாட்டு வாகன ஏற்றுமதியும் 26.67% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே வேன் ஏற்றுமதியானது 80.91% குறைந்துள்ளது. இதில் பயணிகள் கார் ஏற்றுமதியானது 1,00,529 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டு 2,86,618 வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே பயன்பாட்டு வாகன ஏற்றுமதி 54,375 வாகனங்களாகவும், இதே கடந்த ஆண்டு 77,309 வாகனங்களாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேன் ஏற்றுமதி 252 வாகனங்களாகவும், இது கடந்த ஆண்டில் 1,320 வாகனங்களாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.