EBM News Tamil

கேரள தங்க கடத்தல் வழக்கில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு.. என்ஐஏ வெளியிட்ட பகீர் தகவல்

0

டெல்லி: பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில தேடப்படும் மோசமான தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு பங்கு இருந்திருக்கலாம் என்றும் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கேரள மாநில அரசியலை உலுக்கி எடுத்துள்ளது தங்க கடத்தல் வழக்கு. கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீராக தூதரகத்தின் பார்சல் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்த சுங்க கடத்தல் அதிகாரிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்த சொப்னா என்பவரை அப்போது கைது செய்தனர்.

அவர் தற்போது சிறையில் இருக்கிறார். அமலாக்கத்து தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்க இலாகா காபிபோசா சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால் அவர் சிறையில் தான் இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.