லண்டன்: உலக சுகாார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவிலிருந்து தனித்துக் காட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோல கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதன்படி, சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் எந்தளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த வரைபடம்தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.