EBM News Tamil

கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ஆண்டுக்கு 1 லட்சம் கோடியை சேமிக்கலாம்… எப்படினு தெரியுமா?

0

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பது தொடர்பான தகவல்கள் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வரும் 2030ம் ஆண்டிற்குள், புதிய வாகனங்கள் விற்பனையில், 30 சதவீத பங்கை மின்சார வாகனங்கள் பெற்றால், இந்தியாவால் கச்சா எண்ணெய் இறக்குமதியில், ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் (14 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சேமிக்க முடியும் என தற்போது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water – CEEW) இந்த ஆய்வை நடத்தி, தற்போது முடிவுகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் பவர்டிரெயின், பேட்டரி மற்றும் பொது சார்ஜர்களின் ஒருங்கிணைந்த மார்க்கெட் அளவு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் (28 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.