EBM News Tamil

ஒரே விமானத்தில்.. ஒரே வரிசையில்..இடது புறம் எடப்பாடி.. வலதுபுறம் ஸ்டாலின்.. என்ன நடந்தது!

0

சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரே விமானத்திலும், ஒரே வரிசையில் இடது புறம் எடப்பாடியும், வலது புறம் ஸ்டாலினும் பயணித்தனர். இருந்த போதிலும் ஒரு வார்த்தை கூட எடப்பாடி பழனிச்சாமியும், முக ஸ்டாலினும் பேசிக்கொள்ளவில்லை. அரசியலில் இருதுருவங்களாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக ஸ்டாலின் இடையே தனிப்பட்ட முறையில் நல்ல புரிதல் இருக்கிறது.

அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார் முக ஸ்டாலின். இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் அரசியலாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியும், முக ஸ்டாலினுக்கும் இடையே மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் ஒற்றுமையாக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அரசாணையை திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டவும் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.