சென்னை: சிஎஸ்கே அணியில் இந்த முறையாவது ஆடலாம் என்று கனவில் இருந்த இம்ரான் தாஹிர் பெரிய அளவில் ஏமாற்றம் அடைவார் என்று கூறப்படுகிறது. 2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி 6 வீரர்களை எடுத்துள்ளது. 3 அனுபவ வீரர்கள், 3 இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.
அணியின் பேட்டிங், பவுலிங் வலிமையாக இருக்கிறது. ஆனால் ஓப்பனிங் ஜோடி அவ்வளவு வலிமையாக காணப்படவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தற்போது பவுலிங் படை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கேவில் மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் போன்ற வீரர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர். இரண்டு பேருமே ஸ்பின் பவுலர்கள். இவர்கள் இன்னும் சில பவுலர்கள் உள்ளனர்.