ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100ஐ முதல்முறையாக தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை தினந்தோறும் தலையை சுற்றும் அளவுக்கு ஏறி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ 90 ஐ நெருங்கி வருகிறது.
கச்சா எண்ணெய் உயர்வால் எரிபொருளின் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விலையுயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு எகிறும் நிலை உள்ளது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.13 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100 ஐ தாண்டியது.