EBM News Tamil

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்க பிரசிடென்ட்.. ஜோ பிடனிடம் சொன்ன இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள்

0

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள இந்திய உணவக உரிமையாளர்களுடன் அதிபர் ஜோ பிடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட வீடியோவில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நீல் மற்றும் சமீர் இட்னானி ஆகிய இந்திய உணவகமாக Naanstop உரிமையாளருடன் உரையாடும் காட்சிகள் உள்ளன.

அப்போது, புன்முறுவலுடன், கனிவாக காணப்பட்டார் ஜோ பிடன். தங்கள் வணிகம் கிட்டத்தட்ட 75 சதவீதம் குறைந்துவிட்டது என்று நீல், பிடனிடம், கூறினார். அவர் மேலும் கூறுகையில், 20 முதல் 25 ஊழியர்கள் வரை முன்பு பணியாற்றியதாகவும், தற்போது, 10-15 என்ற அளவுக்கு ஊழியர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். “உங்கள் உணவக பிஸினஸ் துளிர்விட இப்போது உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தேவை என்ன?” என்று பிடன் பதிலுக்கு கேட்டார்.

Leave A Reply

Your email address will not be published.