EBM News Tamil

என்ன திமிர்தனம்.. இப்படியா செய்வது?.. ஜாதவை கையெடுத்து கும்பிட்ட சாம்.. விரக்தியில் கத்திய ஜடேஜா!

0

அபுதாபி: நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் நடந்த மூன்று சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. நல்ல பேட்டிங்கா? நெவர்.. என்று தோனியும், ஜாதாவும் டொக் வைத்து ஆடியதில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. வெற்றிபெற வேண்டிய போட்டியை கொல்கத்தாவின் கைக்கு பரிசாக தோனி தூக்கி கொடுத்தது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் சிஎஸ்கேவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பிரியாணி போட்டுகொண்டு இருக்கிறார்கள். இதில் சிக்கிய ஆடுதான் ஜாதவ்!

நேற்று போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு சொல்லப்படும் 100 காரணங்களில் 99 காரணம் கேதார் ஜாதவ்தான். இவரின் பேட்டிங், பீல்டிங் என்று எல்லாமே சிஎஸ்கே அணிக்கு எதிராகத்தான் இருந்தது. நேற்று ஜாதவ் 12 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் ஜாதவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.