லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யா நாத்தை காலிசெய்துவிடுவேன் என மிரட்டியதாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருதத பள்ளியில் அடைத்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவனின் குடும்பம் கடந்த வாரம் முழுவதும் உறவினரின் திருமணத்திற்குத் தயாராகி வந்தது. சிறுவன் உற்சாகமாக இருந்தான். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவன் தன் உறவினர்களைச் சந்திக்க உள்ளதால் மகிழ்ச்சியில் இருந்தார். வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீண்டும் வீட்டு வாசலில் ஒலித்த ஹாலிங் பெல் அவர்களின் சந்தோஷத்திற்கு சாவு மணி அடித்தது
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை “காலி செய்துவிடுவேன்” என்று சிறுவன் மிரட்டியதாக கூறி அவனை அழைத்துச் செல்வதற்காக லக்னோவில் இருந்து போலீசார் வந்திருந்தனர்.