EBM News Tamil

இவர் இருந்தால் போதும்.. சிஎஸ்கேவை தொட கூட முடியாது.. மேட்ச் வின்னரை குறி வைக்கும் தோனி.. செம பின்னணி

0

துபாய்: டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் ஆடும் அணியில் இம்ரான் தாஹிர் இணைக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இம்ரான் தாஹிரை அணியில் எடுப்பதற்கான சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது. 2020 ஐபிஎல் சீசன் அமீரகத்தில் நடக்கும் என்று கூறியவுடன் எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் ஸ்பின் பவுலர்களை தயார் செய்தன. அக்சர் பட்டேல், அஸ்வின், முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர். சுனில் நரேன் என்று எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் ஸ்பின்னர்களை தயார் செய்தன. சிஎஸ்கே அணியும் தங்கள் டீமில் இருக்கும் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கரன் சர்மா ஆகியோரை தீவிரமாக தயார் செய்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஹர்பஜன் சிங் அணியில் இருந்து வெளியேறினார்.

அதேபோல் ரெய்னாவும் அணியில் இருந்து வெளியேறினார். இதனால் எப்போதும் டு பிளஸிஸை உட்கார வைத்துவிட்டு தாஹிரை களமிறக்கும் தோனி இந்த முறை டு பிளஸிஸை ஓப்பனிங் இறக்கினார். இதனால் சாம் கரன், வாட்சன், பிராவோ,, பிளசிஸ் என்று மொத்தமாக வெளிநாட்டு வீரர்கள் கோட்டா முடிந்தது. இதனால் அணியில் இம்ரான் தாஹிரை களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.