EBM News Tamil

இந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..!

0

தனி நபர் வருமானத்த்தில் விரைவில் இந்தியாவை விட வங்க தேசம் முந்திச் செல்ல வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியினை கண்டு வருகிறது. முதல் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு இந்தியாவே ஸ்தம்பித்து போனது என்று தான் கூற வேண்டும். இதனால் பல ஆயிரம் பேர் தங்கள் வேலையினை இழந்து, வாழ்வதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த சமயத்தில் கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் குறித்தான நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கி போயின.

இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான், சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த அறிக்கையில் நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனி நபர் வருவாயினை, அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவை முந்த வாய்ப்புள்ளதாக கூறியது.

Leave A Reply

Your email address will not be published.