இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. உலகின் பல நாடுகள் இந்த வைரஸால் பொருளாதாரரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் முடங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதற்கான தடுப்பூசி கண்டறியும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யா தனது தடுப்பூசியை அறிவித்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஒரு வைரஸ்க்காக தடுப்பூசி இவ்வளவு வேகமாக கண்டறிவது உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை. ரஷ்யா தடுப்பூசி கண்டறிந்து விட்டாலும் அதில் சில பக்கவிளைவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளிலும் சில பக்க விளைவுகள் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசிகளில் இருக்கும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.