EBM News Tamil

ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்!

0

பீஜிங்: வடமேற்கு சீனப் பகுதியில் பல ஆயிரம் மக்களிடம் புருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது ஆண்களிடம் மலட்டுத் தன்மையை உருவாக்கி விடும் ஆபத்து கொண்ட பாக்டீரியா என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அடுத்ததாக அதே சீனாவிலிருந்து மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட மேற்கு சீனாவின் கன்சு மாகாண தலைநகரான லான்ஷோவின், சுகாதார ஆணையம் இதை உறுதி செய்துள்ளது.

இதுவரை 3,245 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் மிகவும் தீவிரத் தன்மை கொண்டது. வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக் கூடும் என்று எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள்.

Leave A Reply

Your email address will not be published.