EBM News Tamil

அடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா? இதோ அதற்கான சில பாட்டி வைத்தியங்கள்!

0

ஒருவருக்கு வாய்வு பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது மிகவும் வேதனையான அனுபவமாகவும் இருக்கலாம். ஏனெனில் இது வயிற்று பிடிப்புகள், வீக்கம், வயிறு கனமாக இருப்பது மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். வாய்வு பிரச்சனையானது ஒருவரது செரிமான மண்டலத்தின் அதிகப்படியான வாயு சேகரிக்கப்படும் நிலையாகும். ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க, முதலில் அது எதனால் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

ஒருவரது செரிமான அமைப்பில் இரண்டு வழிகளில் வாயு சேர வாய்ப்புள்ளது. அதில் ஒன்று சாப்பிடும் போது அல்லது குடிக்கும் போது, ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் உடலினுள் நுழைந்து ஏற்படலாம். மற்றொன்று மற்றும் முக்கியமானது உண்ணும் உணவு ஜீரணிக்கப்படும் போது வயிற்றில் ஹைட்ரஜன், மீத்தேன் அல்லது கார்பன் டைஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்பட்டு சேகரிக்கப்படலாம். இத்தகைய வாயு சரியாக வெளியேற்றப்படாவிட்டால் அல்லது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் நாம் உண்ணும் சில உணவுகளாலும் வாய்வு பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான பீன்ஸ், முட்டைக்கோஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு வகைகள் அல்லது சர்க்கரை நிறைந்த பானங்கள் போன்றவை வயிற்றால் எளிதில் ஜீரணிக்கப்படுவதில்லை. இந்த உணவுகள் செரிமானத்திற்கு உதவி புரியும் ஏராளமான பாக்டீரியாக்களுடன் பெருங்குடல் வழியாக செல்வதால், குடல் பகுதியில் வாயுக்கள் வெளியிடப்பட்டு, அசௌகரியத்தை உண்டாக்குகின்றன. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வாய்வு பிரச்சனையை சரிசெய்ய நம் வீட்டின் சமையலறையிலேயே சில பொருட்கள் உள்ளன. அவை வாயு பிடிப்பில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதிலும் ஆயுத பூஜை அன்று வீட்டில் செய்யப்படும் சுண்டலை அதிகமாக சாப்பிட்டு, நிறைய பேர் வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை சற்று பயனுள்ளதாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.