Ultimate magazine theme for WordPress.

கொரோனாவால் வைரலாகியுள்ள சவப்பெட்டி நடனக்காரர்கள்…! யார் இவர்கள்?

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. வல்லரசு நாடுகளை ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸுக்கு இதுவரை சர்வதேச அளவில் இதுவரை 1.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் பாதிக்கப்பட்ட சுமார் 22 லட்சம் பேரில், உயிரிழந்தவர்கள் போக 5.78 லட்சம் பேர் மீண்டுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி. கொரோனா பரவலை தடுக்க இந்தியா உள்பட பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின.

கொரோனா பேரழிவுக்கு இடையே, ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சில நபர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் வீடியோதான் அது. அதாவது, கொரோனாவால் உலகம் முழுவதும் பலர் உயிரிழந்து வரும் நிலையில், அதனை கிண்டலாக புரியவைக்கவே அந்த வீடியோ பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் மீம்ஸ்களாகவும் பரப்பப்பட்டன. பலரும் இது திரைப்பட காட்சி என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் உண்மையிலேயே சவப்பெட்டி நடனக்காரர்கள் தான்.

நம்மூர்களில் இறுதிச்சடங்கின் போது, சிலர் ஆடிக்கொண்டு செல்வார்கள். அதேபோல, உலகின் பல நாடுகளில் இப்படி இறுதிச்சடங்கில் ஆடுவதற்கென தொழில்முறை குழுக்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கானா நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் ஐடோ என்பவரின் தலைமையிலான குழு.

இறுதிச்சடங்கில் நடனமாடுவதற்கும், சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனமாடுவதற்காகவும் இந்தக் இயங்குகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினரின் முழு விருப்பத்தின் பேரில் நாங்கள் நடனமாடுகிறோம் என்ற்கு பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பெஞ்சமின் ஐடோ.
தங்களின் மனதுக்கு நெருக்கமானவர்கள் இழந்தவர்கள் வலி வேதனையில் இருந்து வெளியே வந்து புன்னகைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்கிறது அவரின் குழு. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ஐடோவின் குழு நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இதனால், பலரும் தங்களது குடும்பத்தில் ஏதாவது மரணம் நடந்தால், ஐடோவின் குழுவை அழைத்தனர். அந்நாட்டின் பல வி.ஐ.பி-களின் வீட்டிலும் ஐடோ குழுவின் கால்கள் நடனமாடியுள்ளன.

இறுதிச்சடங்கில் நடனம் ஆடுவது மட்டுமல்ல, கானா நாட்டில் வேலைவாய்ப்பிண்மை அதிகமாக நிலவி வந்த காலகட்டத்தில் 100-க்கும் அதிகமான பேருக்கு வேலையை அளித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னரே, இக்குழுவின் இறுதிச்சடங்கு நடனங்கள் இணையத்தில் பிரபலம் என்றாலும், தற்போது நெட்டிசன்கள் மூலம் மிக அதிகமாக பிரபலமாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.